Skip to main content

Posts

Showing posts from May, 2019

குழந்தையின் தலையில் சீப்பால் வாரலாமா?

குழந்தை பிறந்து ஒரு வயது வரை சீப்பு பயன் படுத்தக் கூடாதென்று விதிக்கப்பட்டிருந்தது. இது பாட்டிமார் தாய்மாரை எப்போதும் நினைவு படுத்துவதுண்டு. credit: third party image reference பிறந்த போதிருக்கும் முடியைக்களைந்த பின் வளரும் புதிய முடியைச் சீப்பால் வாரலாம். சிசுவின் தலை வளர்ச்சியடைந்து உறுதியாகுவதற்கு முன் சீப்பு பயன்படுத்தினால் உச்சியில் மிருதுவாக இருக்கும் பாகம் தாக்கப்படும் என்பதால் இந்த விதி ஆசரிக்கின்றனர்.

மகப்பேறு நெருங்கும் போது அறையின் ஜன்னல்கள் திறந்து போட வேண்டுமா?

ஏ.சி வசதி பொருத்திய அறைகளுள்ள பலமாடிக் கட்டட மருத்துவமனைகளில் குழந்தைப் பேறுக்காகச் சென்றிருப்பவர்களுக்கு, மேலே கேட்கப்பட்டிருக்கும் கேள்வி பொருந்தாது. ஒரு குழந்தையின் பிறப்பு முதல் இறப்பு வரை ஆசாரங்களைச் சார்ந்து வாழும் நம் நாட்டு மக்கள், இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருந்தால் அதில் அர்த்தமிருக்கும். credit: third party image reference கர்ப்பிணியின் மகப்பேறு காலம் நெருங்கி வரும் போது அறையின் ஜன்னல்கள் திறந்து வைத்திருந்தனர். இதில் மருத்துவச்சிமார் மிகவும் கவனம் செலுத்தியிருந்தனர். பேறுகாலம் நெருங்கும் போது அறையில் காற்றும் வெளிச்சமும் அவசியம் தேவை என்பதால் ஜன்னல்களைத் திறந்து வைக்கின்றனர்.

தெற்குப் புறத்து புளியை வெட்டலாமா?

தெற்குப் புறத்திலிருக்கும் புளியை வெட்டக் கூடாது என்று யாராவது கூறினால் மூடநம்பிக்கை என்று தானே கூற முடியும். பழைய காலத்தில் சில குடும்பங்களில் "தெற்கதுகள்' என்று அழைக்கப்படும் தேவதைகள் குடியிருக்கும் இடம் இருந்து வந்தது. வீட்டின் தெற்கு புறத்தில் குடியிருக்கும் இவர்களுக்கு நிழலாக நின்றிருந்ததனால் தெற்குப் புறத்து புளியை வெட்டக் கூடாது என்று கூறிவந்தனர். credit: third party image reference ஆனால் முன்னோர்கள் இந்தத் தடையை விதித்திருந்ததன் காரணம் வேறு. ஆதிகாலம் முதலே தெற்குப் புறத்தில் புளி நிற்பது ஐசுவரியம் என்று கண்டறிந்திருந்தனர். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று கண்டறிந்துள்ள தெற்குத் திசை வெயிலிருந்து பாதுகாப்பளிக்க தெற்குப் பாகம் நிற்கும் புளி உதவியாயிருந்தது. credit: third party image reference நமக்கு எப்போதும் நன்மையான தெற்குக் காற்றை வீடு நோக்கி வீசச்செய்யவும் இம்மரம் பயன்படுகின்றது. இதை அன்றே அறிந்திருந்தவர்கள் தெற்குப் புறத்துப் புளியை வெட்டுவது தீங்கு என்று தடை விதித்தனர்.

தும்மினால், யாராவது தேடுகின்றனரா?

பேசிக் கொண்டிருக்கும் போது தும்மினால் "யாரோ உன்னைத் தேடுகின்றனர்.தும்மினாயல்லவா" என்று பாட்டிமார் கூறுவது வழக்கம். நமக்கும் பாட்டி கூறுவது சரியாக இருக்கும் என்று தோன்றலாம் ஏனென்றால் இவ்வாறு பலரும் கூறுவதுண்டு. ஆனால் விஞ்ஞானம் இதை எவ்விதத்திலும் தாங்கவில்லை. credit: third party image reference மூக்குக்கும் மூச்சுக் குழாய்க்கும் உள் பாகச்சுவர்கள் 'ம்யூகஸ் மெம்பிரெய்ன்' என்ற ஓர் மெல்லிய படலத்தால் மூடியிருக்கும். இதில் தூசி முதலிய நுண்ணிய பொருட்கள் படியும் போது இதை வெளியேற்ற இயற்கையான ஏற்பாடுதான் தும்மல்.

ஓணான் இரத்தம் குடிக்குமா?

இரத்தம் குடிக்கும் ஓணானின் கழுத்து சிவந்திருக்கும். அது குழந்தைகளை முறைத்துப்பார்த்துக் கொண்டிருந்து அவர்கள் கொப்புழைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும். இதனால் அதன் கழுத்தின் அடிபாகம் சிவப்பு நிறமாகின்றது. credit: third party image reference சிறு குழந்தைகளை பயமுறுத்தக் கூறிவந்த இந்தக் கதை பிற்காலத்தில் முதியவர்களும் நம்பும் கூற்றுக்களாகி விட்டன. ஒரு காலத்தில் ஓணானைப் பார்ப்பதும் நல்ல சகுனமாகவேகருதிவந்தனர். புழுக்கள், பூச்சிகள் என்பவற்றைத் தின்று வாழும் ஓர் சாதுவான பிராணி, ஓணானுக்கு சுற்றுச் சூழலுக்கேற்றவாறு நிறம் மாறும் தன்மையுண்டு. அதன் கழுத்தில் காணும் சிவப்பு இனச்சேர்கை காலங்களில் ஆண் ஓணானில் மட்டும் காணப்படும் என்பதே நிஜம்.

சிறுவர்களுக்கு ஏன் பிரம்மி கொடுக்க வேண்டும்?

சிறுவர்களுக்கு இளம் வயதிலேயே பிரம்மி வழங்க வேண்டும் என்று சொல்வதுண்டு. இதனால் புத்தி கூர்மை வளர்ச்சியடையும் என்பதால் புதுமை வாதிகளும் இதை அனுசரித்து வருகின்றனர். குழந்தைகளின் புத்தி சம்பந்தப்பட்டதானதால் இதை மூடநம்பிக்கை என்று தள்ளி விட வில்லை. credit: third party image reference பிரம்மியை அரைத்து பாலில் கொடுப்பதே வழக்கம். அரிசி மாவுடன் கலந்து வறுத்தும், காலையில் வெறும் வயிற்றில் மென்றும் அருந்தலாம். டப்பியிலடைத்த பிரம்மி கலவையும் பயன்படுத்துவதுண்டு. எப்படியானாலும் பிரம்மிக்குள் அடங்கியிருக்கும் உயிர் சத்துக்கள் மூளை நரம்புகளை உணர்வூட்ட வல்லது என்று நிரூபிக் கப்பட்டிருக்கின்றது.

ஆண்கள் முருங்கை விதை அருந்தலாமா?

முருங்கை இலையிலும் முருங்கைக் காயிலும் உள்ள மருத்துவகுணங்களைக் குறித்து நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் முருங்கை விதைகளை ஆண்கள் உட்கொள்ளுவது கெடுதல் என்று ஒரு கருத்துண்டு. அதனால் பண்டைக்காலங்களில் முருங்கை சேர்ந்த உணவுப்பொருட்களை ஆண்களுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் கொடுக்க மறுத்திருந்தனர். credit: third party image reference சுயமாக விந்து வெளியாகும் நிலையை மாற்றி விந்தை நிலைநிறுத்த முருங்கைவிதையை பாலில் கலந்து குடிக்க வைக்கும் ஓர் சிகிட்சை முறை ஆயுர் வேதத்திலுண்டு. credit: third party image reference பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும். விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும், நரம்புகள் பலப்படும்.

ஈரத்துணி தலையில் வைத்து படுக்கலாமா?

தலையில் ஈரத்துணி வைத்துப் படுப்பதைக் கண்டால் பெரியவர்கள் கண்டிப்பதுண்டு. ஏதோ சில காரணங்களால் குழந்தைகளும் பெரியோர்களும் சில நேரம் இரவில் குளிக்க நேரிடும். அப்போது ஈரத்துணிகளைபடுக்கையிலோ தலையணையிலோ வைத்துவிட்டு படுப்பதுண்டு. இவ்வாறு படுப்பது தீமை என்றும் பாவம் என்றும் பெரியோர்கள் கூறுவதுண்டு. credit: third party image reference பகல் நேரம் உடலில் இருந்த நோயணுக்கள் ஈரத்துணியில் படிந்திருக்கும். அவை படுக்கையில் வைக்கும் போது மறுபடியும் உடலுக்கே திரும்பி வரும் நிலை ஏற்படும். மேலும் ஈரத்துணிகள் தலைக்கடியில் வைத்திருந்தால் ஜல தோஷ பாதிப்புண்டாகும் என்றும் நமக்குத் தெரியும் இதனால் படுக்கும் போது, ஈரத் துணிகள் படுக்கையில் வைப்பது கெடுதல் உண்டாக்கும் என்று விதி வகுத்தனர்.

கடுகுசிதறினால் சண்டை உண்டாகுமா?

கடுகுதரையில் விழுந்து சிதறினால் வீட்டில் அன்று கலகம் உண்டாகும் என்பது நம்பிக்கை. யுக்தியுடன் சிந்தனை செய்தால் இதுவும் நிஜம்தான். மிகக்கவனமாகவே கடுகு கொடுத்து வாங்கி வருவது. தன்கையிலிருந்து தரையில் போகாமலிருக்க கொடுப்பவரும் வாங்கும் போது சிதறாமலிருக்க வாங்கும் நபரும் மிகக் கவனமாக இருப்பது வழக்கம். credit: third party image reference மிகச் சிறியதும் உருண்டு போவதுமான பொருளான கடுகு தரையில் விழந்து சிதறினால் மறுபடியும் அதைச் சேகரித்து எடுப்பது மிகவும் கடினமான வேலை. அவ்வாறு கடுகு நஷ்டப்படுத்திய நபரைப் பிறர் கண்டனம் செய்வது இயற்கையானதே. இதனால் அதிகக் கவனம் செலுத்தத் தூண்டுமாறு "கடுகு சிதறினால் கலகம்" என்ற மூதுரை வழக்கத்துக்கு வந்தது.

ஆடிமாதத்து வெள்ளிக்கிழமை கனகப்பொடி அருந்த வேண்டுமா?

ஆடி மாதத்து வெள்ளிக்கிழமையன்று கனகப்பொடி உண்ண வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு. இதை வெறும் மூட நம்பிக்கை என்று பலரும் எண்ணி வருகின்றனர். எண்ணற்ற நவீன உணவுப் பொருட்களின் மத்தியில் இது போன்ற நாட்டுப்புற உணவு ஏன் உண்ண வேண்டும் என்று கேட்டால் அதிசயமில்லை. credit: third party image reference ஏனென்றால், உலர்ந்த தவிட்டை வெல்லத்தில் குழைத்து அதை தோசை போல் பரப்பி, தீக்கனலில் சுட்டெடுத்து உண்டாக்குவதே கனகப்பொடி, குடும்பத்திலுள்ளவர்கள் எல்லோரும் வட்டமாக அமர்ந்து பங்கிட்டு வைத்து வெறும் வயிற்றில் உண்ணும் ஆசாரமே கனகப் பொடி அருந்துதல், நாருள்ள உணவுப் பொருட்களின் பட்டியலில் உட்படும் உலர்ந்த தவிட்டில் வைட்டமின்பீ ஏராளமுண்டு. வெல்லத்தில் இரும்புச் சத்து அடங்கியுள்ளது. இதுவே கனகப் பொடியின் சிறப்பு.

மஞ்சளில்லாமல் சமையல் செய்யலாமா?

மஞ்சள் சேர்க்காமல் சமையல் செய்தால் அது சுவையற்றிருக்கும், பார்க்கவும் அழகிருக்காது. பல தாய்மார்களும் இதனாலேயே சமையலில் மஞ்சள் சேர்க்கின்றனர். ஆனால் மஞ்சளில் உள்ள குணங்கள் இவையல்ல. மஞ்சள் காய்ச்சிக் குடித்தால் மனித உடலுக்கு ஜீவ சக்தி கிடைக்கும் என்று ஆயுர் வேதம் கூறுகின்றது. credit: third party image reference மஞ்சள் கலந்த வகைகள் உட் கொள்ளும் போது இரத்த அசுத்தத்தால் உண்டாகும் சரும நோய்கள், சிறுநீர் சம்பந்தமான, குடல் கிருமிகள் முதலிய உணவுவாயிலாகவோ, வேறுவழியிலோ உடலில்வையின் பாதிப்பிலிருந்து விலகலாம். credit: third party image reference மேலும் புகுந்த விஷ அம்சங்களை அழிப்பதற்கும் மஞ்சள் உதவுகின்றது. வயிற்றுக்கோளாறு, வாயுக்கோளாறு என்பவையை தணிக்கின்றது மஞ்சள் சருமத்துக்கு மென்மையும் அளித்து நோயணுக்களை அழித்து அழகையும் அதிகரிக்கின்றது.

இரவுணவுக்குப்பின் அரைக்காதம் நடக்க வேண்டுமா?

இரவு உணவருந்திய பின் அரைக்காதம் நடக்க வேண்டும் என்பது மூதுரை. இது வெறும் நம்பிக்கையல்ல, அறிவு நிறைந்த செயல் என்று 'சுகாதார இயல்போதிக்கின்றது. credit: third party image reference அரைவயிறுக்கு இரவு வேளை உண்டு அரைக்காதம் நடந்த பின்னரே படுக்கைக்குச் செல்ல வேண்டும் உண்ட உடன் படுக்கையில் விழுவது ஜீரணத்தை மிகவும் பாதிக்கும் வழக்கமாக உண்ட உடன் உறங்குபவர்கள் சில நோய்கள் பாதிக்கவும் வாய்ப்புண்டு. இதை நம் முன்னோர்கள் அறிந்திருந்ததனால் இரவு உண்டபின் 'அரைக்காதம் நடக்குமாறு போதித்தனர்.

தண்ணீர் குடிக்கும் போது ஒருதுளியாவது சுண்டிவிடுவது ஏன்?

தண்ணீர் குடிக்கும் முன் ஒருதுளியாவது விரலில் எடுத்து தெளித்து விட வேண்டும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது நமக்கு சுற்றும் வசிக்கும் பூதகணங்களுக்காக அப்படி செய்வதுஎன்று நம்பிக்கை. credit: third party image reference நம்பிக்கை இதுவானாலும் இரண்டு துளியாவது சுண்டிவிட்ட பின் நீர் குடிப்பது நல்லது 'என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனெனில் கோப்பையிலானாலும் கிண்ணத்திலானாலும் குடிநீர் எடுக்கும் போது ஏதாவது துகள் படிந்திருக்க வாய்ப்புண்டு. இது அனேகமாக மிதந்து கிடக்கும். இரு துளி நீரைச் சுண்டி விடும் போது இது போன்ற 'அசுத்தங்கள் விலகி சுத்தமான நீர் கிடைக்கும்.

உணவு இலையில் உண்ண வேண்டுமா?

டிஸ்போசபில் பாத்திரங்கள் உற்பத்தி பெருகியதாலும், இலைகளின் பற்றாக்குறையாலும் நம் நாட்டினர் கூட இலையை ஓர் பழைய காலத்து நினைவாகவே வைத்துள்ளனர் என்பதே நிஜநிலை. எல்லா நாளும் மதிய உணவு இலையில் உண்ணும் ஒரு காலம் நம் நாட்டில் இருந்தது. credit: third party image reference வேளாண்மைத் துறையும் வேளாண்மைத் தொழிலும் ஆராதனையாகக் கொண்டிருந்த தலைமுறை மாய்ந்ததும் நாம் மேல் நாட்டு கலாச்சாரத்தில் மூழ்கி அதன் அடிமைகளாகி விட்டோம். வாழை போன்ற தீங்கற்றதும் சுத்தமானதுமான இலைகளில் உணவருந்தி வந்தனர். இவைகளில் சிறிய அளவிலாவது மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதாக உண்ணும் போது சுத்தம் கடைபிடிக்க இயல்கின்றது. credit: third party image reference இலைகளில் என்று மட்டுமல்லாமல், ஒருவர் உண்ட பின் அதில் மற்றொருவருக்கு பரிமாறும் நிலையும் வரவில்லை.

அரிசி வேகும் முன்பு பாயசத்தில் வெல்லம் போடக் கூடாதென்பது ஏன்?

பாயசம் தயாரிக்கும் போது கடைபிடிக்கும் ஒரு பாடமாகும் அரிசி வேகுவதற்கு முன் வெல்லம் சேர்க்கக் கூடாதென்பது. அரிசி நன்றாக வேக வேண்டுமானால் கொதிக்கும் நீர் அரிசிக்குள் நுழைய வேண்டும். கொதிக்கும் நீரினுள் சில வேதியல் பரிணாமங்கள் நிகழ்கின்றன. இதனால் அரிசி பருமனடைந்து மிருதுவாகின்றது. credit: third party image reference அரிசிப் பாயசம் தயாரிக்கும் போது அரிசி வேகும் முன்பாக வெல்லம் சேர்த்தால் வெல்லம் நீரில் கரைந்து அரிசிக்கு சுற்றும் சூழ்ந்திருக்கும். இந்த கரைசலுக்கு அடர்த்தி அதிகமாதலால், நீர் அரிசிக்குள் நுழைவதைத் தடை செய்கின்றது. credit: third party image reference மேலும் அரிசியின் கோச திரவங்கள் வெளியேறுகின்றன. இதனால் அரிசி சுருங்கி விடும். நீர் உள்ளே நுழைய இயலாததால் அரிசி நன்றாக வேகாமலே இருக்கின்றது.

காலையில் கஞ்சியும் நெய்யும் அருந்துவதன் மேன்மை என்ன?

நம் நாட்டில், அதிகாலையில் கஞ்சியும் நெய்யும் அருந்தும் வழக்கமிருந்தது. பண்டைக் காலத்தில் நவீன உணவு முறைகள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகள் இன்றைய தலைமுறை பழக்கப்படுத்தி வருவதால், கஞ்சி நெய், கீரை, பயிறு வகைகள் என்பவைக்கு இடமில்லாமல் போய்விட்டது. credit: third party image reference காலை உணவுக்கு கஞ்சியும் நெய்யும் அருந்தியருந்தவர்கள் அதன் கூடவே கீரை வகைகள், பயிறு வகைகள் முதலியவையும் சேர்த்திருந்தனர். சரிவிகித உணவாக அமைந்ததாலே, அன்றைய மக்கள் இவ்வகை உணவைப் பழக்கப்படுத்தியிருந்தனர். கஞ்சியிலிருக்கும் தாராளமான நீர் நமது இரத்தத்தில் கட்டியிருக்கும் விஷ அம்சத்தையும் அசுத்தங்களையும் முற்றிலும் அகற்றி விட உதவுகின்றது. மேலும் இவ்வுணவிலடங்கியிருக்கும் வைட்டமின்கள் உடல் நலத்தைப் பாதுகாக்க உதவும். நெய்யிலிருந்து தேவையான ஃபாஸ்பரஸ் மற்றும் கொழுப்பு கிடைக்கின்றது. credit: third party image reference பயிறு வகையிலிருந்து புரத சத்தும் கீரைகளிலிருந்து வைடமினும் கிடைக்கும். கஞ்சியின் சோறு நம் உடலுக்குத் தேவைப்படும் கார்போ ஹைட்ரெய்ட்டும் அளிக்கின்றது.

மனநிம்மதியிருந்தால் உடல் சுகம் அடையுமா?

மனித மனதில் சமாதானமிருந்தால் உடலுக்கும் சுகமே என்பது முதியோர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. இதன் பொருளாவது, நோய்கள் வராமலிருக்க மனதை சீர் செய்து. நிறுத்த வேண்டும். மனதை நிம்மதியின் பாதைக்கு செலுத்தினால் அது உடலை நிம்மதியின் பாதைக்கு செலுத்தும். credit: third party image reference மனிதனைப் பாதிக்கும் பல நோய்களுக்கும் காரணம் நிம்மதியின்மையே என்று விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது. நிம்மதி இழந்து மனப்பாரம் அதிகரிப்பதனால் உடலைப் பாதிக்கும் ஒரு நோயான 'அல்சர்' குறித்து மருத்துவத்துறைகண்டறிந்த உண்மைகள் பிரசித்தியானவை. credit: third party image reference 'டென் ஷன்' அதிகரிக்கும் போது உடலில் 'ஹைட் ரொக்லாரிக் ஆசிட்' உற்பத்தியும் அதிகரிக்கின்றது. இந்த அமிலம் சிறு குடலின் 'ம்யூகஸ்' கவசத்தில் பாதிப்புண்டாக்கி குடல் தசைகளில் இரணங்களை உருவாக்குகின்றது. இரணங்கள் வளர்ந்து 'அல்சர்' ஆகவும் சிலநேரம் 'கான்சர்' ஆகவும் மாற்றமடைகின்றன. இவ்வாறு நோய்கள் என்று அழைக்கப்படும் மனதிலுள்ள மனிதனை பாதிக்கும் நோய்களை 'சைகோசமாடிக்" பாதிப்பு வளர்ந்து உடலில...

சுத்த உடலுடன் மாலை ஜெபம் செய்ய வேண்டும் என்பது ஏன்?

மாலை ஜெபம் சொல்ல வேண்டுமென்ற வழக்கம் மூட நம்பிக்கை என்று தள்ளி விடுகின்றது இன்றைய தலைமுறை. ஆனால் ஒரே சிந்தனையுடன் சுத்த உடலுடன் மாலை ஜெபம் செய்ய வேண்டும் என்று ஆசாரியர் போதித்துள்ளனர். credit: third party image reference பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் இயல்பாகவே ஏராளம் விஷ அணுக்கள் சுற்றுச் சூழலில் பரவி இருக்கும் என்ற உண்மையை பண்டைக் காலத்தவர் அறிந்திருந்தனர். இந்த அணுக்கள் நம்மை முற்றிலும் பாதிக்கும் என்பதும் உணர்ந்திருந்தனர். இதைத் தவிர்க்க எள்ளெண்ணை ஊற்றிக் கொளுத்தி வைத்த குத்து விளக்கிற்கு சுற்றிலும் இருந்து சுத்த உடலுடன் மாலை ஜெபம் சொல்ல வேண்டும் என்று கூறப்படுகின்றது. விளக்கிலிருந்து எழும்பிராணசக்தி சுற்றுமிருக்கும் விஷ அணுக்களிலிருந்து நம்மை ரட்சிக்கும்.

பொரித்த எண்ணையால் விளக்கு பற்ற வைக்கலாமா?

பொரித்த எண்ணையை விளக்கில் ஊற்றக் கூடாது என்பது முன்னோர்கள் வகுத்த விதி. அதே போல் விளக்கு பற்றவைக்கும் எண்ணையைச் சமயலுக்கும் பயன்படுத்தக் கூடாது என்பது விதி. நவீன சாஸ்திரத்தின் படி ஒரு முறை பொரித்த எண்ணையால் மறுபடி சமையல் செய்வதும் தவறு. இதற்கு காரணமுண்டு. முன்பு நம்பிக்கையாகவே இது கடை பிடிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அதனாலுண்டாகும் தீங்குகளை பற்றி நவீன சாஸ்திரம் கூறுகின்றது. பல சோதனைகள் செய்தே இதை நிரூபித்துள்ளனர். credit: third party image reference அப்பளம் முதலியவை பொரித்த பின் அந்த எண்ணையை பத்திரப்படுத்தி வைத்து மறுபடியும் பயன்படுத்தும் வழக்கம் இன்றும் உண்டு. இது தீமை விளைவிக்கும் என்பது நிபுணர்கள் கருத்து. credit: third party image reference பொரிப்பதற்காக எண்ணையை ஒரு முறை உபயோகித்தால் அது சூடாகும் போதே அதில் கார்பன் உருவாகும் அவ்வாறு கார்பன் உருவான எண்ணையில் வேறு எண்ணை சேர்த்தாலும் அதே எண்ணையை பயன்படுத்தினாலும் தாயாராகும் உணவுப் பொருளில் தீங்கு விளைவிக்கும் கூட்டுப் பொருள்கள் உருவாகும் என்று கண்டறிந்துள்ளனர். இந்த உண்மையை அன்றே புரிந்து கொண்டு இப்படி ஒரு வழக்க...

குத்துவிளக்கில் ஏன் எள்ளெண்ணை ஊற்றி எரிக்கின்றோம்?

குத்து விளக்கில் எள்ளெண்ணை விட்டு பற்ற வைக்க வேண்டும் எனக் கூறும் போது எந்த எண்ணையானால் என்ன, விளக்கு எரிந்தால் சரிதானே என்று பலரும் பதிலளிக்கலாம். இது முற்றிலும் தவறு. கண்டிப்பாக எள்ளெண்ணையே குத்து விளக்கில் ஊற்ற வேண்டும். சனி தேவனை துதித்து ஆசிபெறவே எள்ளெண்ணை உபயோகிப்பது. எள்ளெண்ணை சனி கிரகத்தின் பிரதிநிதியாகக் கருதப்படுகின்றது. எள்ளெண்ணை இரும்புச் சத்தடங்கியது. என்பது நம்மில் பலருக்கும் தெரியாது, நம்நாட்டில் இரும்புச் சத்து பற்றாக் குறையால் வரும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. பண்டைக் காலத்தில் இதை அறிந்திருந்ததனால் விளக்கிற்கும், குளிப்பதற்க்கும், சமையலுக்கும் எள்ளெண்ணையே பயன்படுத்தி வந்தனர். இடைப் பயிராக பெரும் பகுதி எள் பயிரிடப்பட்டிருந்தது. credit: third party image reference நோயுற்று மருத்துவரிடம் செல்லும் போது, மருத்துவர்கள் இரும்பு மாத்திரைகளும், டானிக்குகளும் பரிந்துரை செய்யும் போதெல்லாம் நமக்கு எள்ளின் மேன்மை தெரியாமல் போகின்றது. எள்ளெண்ணை உபயேகித்து விளக்கு எரிக்கும் போது சுற்றுச்சூழலின் இரும்பின் பிராணசக்தி பரவியிருப்பதும் நாம் அறிவதில்லை. credit: third party ...

தெற்குதிசையிலுள்ள தீபம் ஏன் தரிசிக்க வேண்டும்?

தீபத்திற்கும் அதன் சுடர்களுக்கும் சாஸ்திரப்படி நற்குணங்கள் உள்ள போதிலும், தெற்கு திசையிலிருந்து வரும் தீபத்தை தரிசிக்க வேண்டும் என்று ஆசாரியர் கற்பித்துள்ளனர். ஆனால் குத்து விளக்கிற்கு திரிவைக்கும் போது தெற்கு நோக்கி வைத்து பற்றவைக்க வேண்டும். தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒரு காந்த சக்தி செயல்படுகின்றது இந்த காந்த சக்தியின் ஆரம்ப இடமான தெற்குப் பக்கத்திலிருந்து வரும் தீபச்சுடர் அந்த காந்த சக்தியின் வழியாகக் கடந்து வருகின்றது. இதனால் தெற்குதிசையிலுள்ள தீபத்தைத் தரிசிக்க வேண்டும் என்று ஆசாரியர்கள் விதித்தன.  credit: third party image reference இவ்வாறு கடந்து செல்லுவதற்காகவே பழைய சுவர்களில் தெற்கேயும் வடக்கேயும் துவாரங்க அமைத்திருந்தனர். தெற்கு நோக்கியுள்ள அதாவது காந்த 'சக்திக்கு எதிரான உள்ள பலதுக்கும் பழைய மக்கள் விலக்கு விதித்திருந்தனர். வீடுகட்டும் போது பொதுவாக தெற்கு நோக்கி படி கட்டுவதில்லை. குளிக்கும் போது தெற்கு நோக்கி நின்று முங்கக் கூடாதுதென்று விதித்தனர். மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது தெற்கே பார்த்து உட்காரக்கூடாது. கோடாலி முதலிய கருவிகளை தெற்கு பாகத்தில்...