பேசிக் கொண்டிருக்கும் போது தும்மினால் "யாரோ உன்னைத் தேடுகின்றனர்.தும்மினாயல்லவா" என்று பாட்டிமார் கூறுவது வழக்கம். நமக்கும் பாட்டி கூறுவது சரியாக இருக்கும் என்று தோன்றலாம் ஏனென்றால் இவ்வாறு பலரும் கூறுவதுண்டு. ஆனால் விஞ்ஞானம் இதை எவ்விதத்திலும் தாங்கவில்லை.
credit: third party image reference
மூக்குக்கும் மூச்சுக் குழாய்க்கும் உள் பாகச்சுவர்கள் 'ம்யூகஸ் மெம்பிரெய்ன்' என்ற ஓர் மெல்லிய படலத்தால் மூடியிருக்கும். இதில் தூசி முதலிய நுண்ணிய பொருட்கள் படியும் போது இதை வெளியேற்ற இயற்கையான ஏற்பாடுதான் தும்மல்.
Comments
Post a Comment