பாயசம் தயாரிக்கும் போது கடைபிடிக்கும் ஒரு பாடமாகும் அரிசி வேகுவதற்கு முன் வெல்லம் சேர்க்கக் கூடாதென்பது. அரிசி நன்றாக வேக வேண்டுமானால் கொதிக்கும் நீர் அரிசிக்குள் நுழைய வேண்டும். கொதிக்கும் நீரினுள் சில வேதியல் பரிணாமங்கள் நிகழ்கின்றன. இதனால் அரிசி பருமனடைந்து மிருதுவாகின்றது.
credit: third party image reference
அரிசிப் பாயசம் தயாரிக்கும் போது அரிசி வேகும் முன்பாக வெல்லம் சேர்த்தால் வெல்லம் நீரில் கரைந்து அரிசிக்கு சுற்றும் சூழ்ந்திருக்கும். இந்த கரைசலுக்கு அடர்த்தி அதிகமாதலால், நீர் அரிசிக்குள் நுழைவதைத் தடை செய்கின்றது.
credit: third party image reference
மேலும் அரிசியின் கோச திரவங்கள் வெளியேறுகின்றன. இதனால் அரிசி சுருங்கி விடும். நீர் உள்ளே நுழைய இயலாததால் அரிசி நன்றாக வேகாமலே இருக்கின்றது.
Comments
Post a Comment