தீபத்திற்கும் அதன் சுடர்களுக்கும் சாஸ்திரப்படி நற்குணங்கள் உள்ள போதிலும்,
தெற்கு திசையிலிருந்து வரும் தீபத்தை தரிசிக்க வேண்டும் என்று ஆசாரியர் கற்பித்துள்ளனர். ஆனால் குத்து விளக்கிற்கு திரிவைக்கும் போது தெற்கு நோக்கி வைத்து பற்றவைக்க வேண்டும். தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒரு காந்த சக்தி செயல்படுகின்றது இந்த காந்த சக்தியின் ஆரம்ப இடமான தெற்குப் பக்கத்திலிருந்து வரும் தீபச்சுடர் அந்த காந்த சக்தியின் வழியாகக் கடந்து வருகின்றது. இதனால் தெற்குதிசையிலுள்ள தீபத்தைத் தரிசிக்க வேண்டும் என்று ஆசாரியர்கள் விதித்தன.
credit: third party image reference
இவ்வாறு கடந்து செல்லுவதற்காகவே பழைய சுவர்களில் தெற்கேயும் வடக்கேயும் துவாரங்க அமைத்திருந்தனர். தெற்கு நோக்கியுள்ள அதாவது காந்த 'சக்திக்கு எதிரான உள்ள பலதுக்கும் பழைய மக்கள் விலக்கு விதித்திருந்தனர். வீடுகட்டும் போது பொதுவாக தெற்கு நோக்கி படி கட்டுவதில்லை. குளிக்கும் போது தெற்கு நோக்கி நின்று முங்கக் கூடாதுதென்று விதித்தனர். மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது தெற்கே பார்த்து உட்காரக்கூடாது. கோடாலி முதலிய கருவிகளை தெற்கு பாகத்தில் வைக்கலாகாது. இப்படி தெற்குத் திசையைப் பற்றி பல விஷயங்கள் கண்டறிந்துள்ளனர்.
Comments
Post a Comment