Skip to main content

Posts

Showing posts from March, 2019

துளசி இலையை காதுக்குப் பின் வைப்பது ஏன்?

காதுக்கு பின் துளசிக்கதிர் அல்லது இலை சூடுவதற்க்கு இக்காலத்தில் யாரும் தயாராகமாட்டார்கள். அப்படி சூடுபவர்களை "காதில் பூவைத்தவன்" என்று ஏளனமாகக் கூறுவதுண்டு. ஆனால் காதுக்குப்பின் துளசி வைப்பதனால் பெரும் பயனடைந்தனர் பண்டைய மக்கள். மனித உடலில் மிகக் கூடுதல் உறிஞ்சும் சக்தியுடையது காதுக்குப் பின்புறம் ஆகும் என்பது விஞ்ஞானம் நிரூபித்திருக்கின்றது. துளசியின் மருத்துவ குணங்கள்களை நாம் நன்கறிவோம் இந்த மருத்துவ குணங்கள் காதுக்குப்பின்னுள்ள சரும் வழியாக ஊடுருவிச் செல்லும். இதுவே பழங்காலத்து மக்கள் காதுக்குப்பின் துளசியிலையை சூடிவந்ததும், பின் சந்ததிக்கு அதைக் கற்பித்ததும். பழங்காலத்திலுள்ள வீடுகளில் துளசி மாடம் கட்டி துளசியை ஓர் புனிதச் செடியாகப் பராமரித்து வந்தனர். credit: third party image reference சூரிய ஓளி கிடைக்கும் இடத்தில் கிழக்குப் பக்கத்து வாசலுக்கு நேராக துளசிமாடம் கட்ட வேண்டும் என்று ஆசாரியர் போதித்துள்ளனர். வீட்டின் அளவில் துளசித் தரை அமைக்க வேண்டும். துளசி தரையை விட தாழ்ந்த மட்டத்திலாகாமல் குறிப்பிட்ட தரையில் நடுவதற்காக கிருஷ்ணதுளசி தேர்ந்தெடுக்க வேண்டும...

உடல் முழுவதும் திருநீர் பூச வேண்டுமா?

திருநீர் பூசுவதையே மூட நம்பிக்கையாகக் கருதும் இக்காலத்தில், உடல் முழுவதும் திருநீர் பூசவேண்டும் என்று சொன்னால் சொல்லுபவருக்கு 'அடிப்படையாக எதோ குழப்பம் இருப்பதாக கேட்பவர்கள் எண்ணுவர். இறைவனருள் இதனால் கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கை இருந்தாலும் உடலெங்கும் விபூதி அணிவதால் மற்றுமொரு நன்மை உண்டாகும் தலை உச்சியில் திருநீர் பூசினால் அங்குள்ள நீர்க்கெட்டை இழுத்தெடுக்கும் என்பது பலரும் கண்டறிந்துள்ளனர். அதற்காக உடலெங்கும் விபூதியணிவது.அலங்கோலமாக்க வேண்டுமோ என்றால் அதற்குபதிலளிக்க வேண்டியது தான். credit: third party image reference பின் கழுத்தில் திருநீறு பூசுவது மிக அவசியம். ஏனென்றால் நீரை உறிஞ்சி எடுக்கும் வாய்ப்பு மிக அதிகம் உள்ள இடம் அது. காதுகளும் மிக முக்கியமான இடம். உடம்பின் எழுபத்திரண்டாயிரம் நரம்புகளும் ஒன்று சேரும் வர்மமாகும் காதுகள் ஒவ்வொரு நரம்புகளிலும் நீரும் கொழுப்பும் கட்டுவதற்கு வாய்ப்பு அதிகமுண்டு. இதனால் வாதம் பாதிப்புண்டாகலாம் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. credit: third party image reference உடலில் எந்த இடத்தில்விபூதி அணிந்தாலும் அந்த இடத்தில் உள்ள ஈர...

திருநீர்(விபூதி) அணிவது எதற்காக?

குளியலைப் போலவே திருநீரணிவதும் அன்றாட வாழ்க்கையின்ஓர் முக்கிய பாகமாயிருந்தது. முற்காலத்தில் முழு விசுவாசத்துடன் ஒருசிட்டிகை திருநீர் எடுத்து நெற்றியில் வைத்த பின்னே பண்டைய பக்தர்கள் ஜெபத்துக்கு அமருவர். ஜெபத்தில் நம்பிக்கை நிறைந்திருப்பது போலவே திருநீரில் 'மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. credit: third party image reference சுத்தமான திருநீர் தயாரிக்கும் முறை காலப்போக்கில் மாற்றமடைந்த போதிலும் பழைய முறைகளை கடைபிடிப்பவர்களுமுண்டு. புல் மட்டும் அருந்தும் பசுவின் சுத்தமான எருவை சிவராத்திரி அன்று உமியில் எரித்துக் கிடைக்கும். சாம்பலை தண்ணீரில் கலக்கி மறுபடியும் உலரவைத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தபின் நெற்றியிலிடுவதற்காக பாதுகாத்து வைக்க வேண்டும். திருநீரை நனைத்தும் நனைக்காமலும் அணிவதுண்டு. திரு நீரணிந்தால் உடலின் துர் நீரை உறிஞ்சி எடுப்பதற்கும், உடல் வெப்பத்தை குறைப்பதற்கும், உடல்நிலையை மேன்மைய டையச் செய்வதற்கும் வாய்ப்புண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தியாகத்தின் வடிவமான சிவபெருமானை இந்துமதம் கருதியுள்ளது. credit: third party image reference நெற்றி,...

இடுப்புக்குக் கீழ் சந்தனம் அணியலாமா?

திருநீர் அணிவதைப் போலவே சந்தனம் பூசுவதற்க்கும் இந்து மத ஆசாரம் பல விதிகள் வகுத்துள்ளன. ஆனால் இடுப்புக்கு கீழ் சந்தனம் அணிவது விலக்கப்பட்டுள்ளது. இதுபோலவே காலில் தங்கம் அணியக்கூடாது என்றும் போதிக்கப்பட்டுள்ளது. தங்கத்தில் லட்சுமி குடியிருப்பதாக நம்புவதால் அதை காலில் அணியவேண்டாம் என்று கூறப்படுகின்றது. இது மூட நம்பிக்கை என்பதை விட இதில் விஞ்ஞானமும் அடங்கியிருக்கிறது. தங்கம் நிரந்தரமாக காலில் அணியும் போது வாதம் வர வாய்ப்புண்டு என்று நம் நாட்டு மருத்துவதுறை கண்டறிந்துள்ளது. தேவர்களுக்கு படைக்கும் சந்தனம், திருநீறு, குங்குமம் முதலியவற்றை இடுப்புக்கு கீழ் அணிய கூடாது என்று போதிக்கப்பட் டுள்ளது. இதுவும் முற்றிலும் விஞ்ஞான அடிப்படையில் கூறப்படுகின்றது என்பது அண்மையில் சில கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன. சந்தனம் பொதுவாக ஒரு குளிரச் செய்யும் பொருள். இதை இடுப்புக்குக் கீழ் மிகையாகப் பூசினால் இன் விருத்தித் திறனை பாதிக்கும் என்று நவீனசாஸ்திரம் கூறுகின்றது.

சந்தனம், கோயிலுக்கு வெளியில் சென்ற பின் அணிய வேண்டும்

கோயிலுக்கு செல்லும் பக்தன் பொதுவாக பூசாரியிடமிருந்து பிரசாதம் வாங்கி வர வேண்டும் என்பதுவே முறை. சந்தனம், தீர்த்தம், தீபம், துபம், பூ என்பவை ஐந்தும் பெற்றுக் கொள்ள வேண்டும். இவை பஞ்சபூதங்களைக் குறிக்கின்றன. பூவும் துளசியும் குவளையும் சேர்ந்ததீர்த்தம் சிறிதும் தரையில் சிந்தாமல் ஒன்றோ இரண்டோ துளிகள் வாங்கி பக்தியுடன் அருந்த வேண்டும். மிஞ்சியிருந்தால் தலையில் தெளிக்கலாம். credit: third party image reference பூவை தலையில் அணியலாம். பெண்கள் கூந்தல் நுனியில் சொருகி வைக்கலாம். தூபமும் தீபமும் இருகைகளால் ஏற்றுக் கொண்டு கண்களில் ஒற்றி கீழ் நோக்கி தடவி விட வேண்டும். பின்னர் பிரசாதமாகக் கிடைக்கப்பெறும் சந்தனம் கோயிலுக்கு வெளியே வந்து அணிய வேண்டும். ஆனால் பெரும்பான்மையானோர் கிடைத்தவுடன் அணிவது வழக்கம்.

திலகமிடுவது மிக அவசியமா? - தமிழர்களின் பண்பாட்டு ரகசியம்

         திலகமிடுவது ஆத்மிக முன்னேற்றத்தின் சின்னம் என்பது பொதுக் கருத்து பரமேஸ்வரனின் நெற்றிக்கண்ணாக அமையும் பாகத்தில் தான் பொதுவாக பொட்டு வைக்கும் வழக்கம். குங்குமம், சந்தனம், திருநீர் என்பவை பொதுவாக திலகமிடப்யன்படுத்துகின்றனர். இந்து மத விசுவாசத்தின் பாகமாக திலகமிடுவதைக் கருதி வருகின்றனர் என்றாலும் இது, மத விசுவாசத்துடன் சம்பந்தப்பட்டதல்லாமலே ஒரு நபரில் நிச்சயமான செல்வாக்கு செலுத்தவல்லது. மனித உடலின் ஐந்தாவது திறன்மையமான நெற்றியின் மத்தியிலே பொட்டுவைப்பது வழக்கம் இந்த மையத்தில் பார்வையைப் பதிய வைத்தே தன்வயப்படுத்தி மயங்கவைப்பது. இம்மையத்தில் குங்குமம் அணியும் போது சூரியனின் கதிர்களில் அடங்கியிருக்கும் மருத்துவ குணங்களை உறிஞ்சி எடுத்து மூளைக்குள் செலுத்தி விடுகின்றது. credit: third party image reference பிரம்ம முகூர்த்தத்தில் சந்தனமும், விடியற்காலை குங்குமமும் மாலைப் பொழுதில் திருநீரும் அணிவது நரம்பு உறுதிக்கும் நோய் நிவாரணத்துக்கும் உத்தமம் என்று சூரிய ஒளியையும் மனித உடலையும் சம்பந்தப்படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தி...

குளித்ததும் முதலில் முதுகைத் துடைக்க வேண்டும் என்பது ஏன்?

குளித்த பின் முதலில் முதுகைத்தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை. இதில் நம்பத்தகுந்த சுவாரசியமான ஓர் விஷயம் அடங்கியிருக்கின்றது. நம் உடலில் எப்போதும் இரண்டு சூழ்நிலைகள் உள்ளன. நன்மையும் தீமையும் நன்மையென்ற ஸ்ரீதேவியும் தீமையென்ற மூதேவியும். நாம் குளிப்பதற்காக தலையில் நீரூற்றும் போது ஸ்ரீதேவியும் மூதேவியும் உடலிலிருந்து வெளியேறுகின்றனர். பின் நமக்குள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும். உடலில் யார் முதலில் திரும்ப நுழைய வேண்டும் என்பதற்கே இந்த போராட்டம். உடலில் எந்த பாகத்தில் முதலாவது ஈரம் துடைத்து சுத்தமாகின்றதோ அப்பாகத்தில் மூதேவி நுழைந்து விடுவது வழக்கம். ஏனென்றால் இப்போராட்டத்தில் வெற்றியடைவது தீமையான மூதேவியே. இரண்டாவது முகம் துடைத்தால் அங்கு ஸ்ரீதேவி புகுந்து நாள் முழுவதும் நன்மை விளங்கும் முகத்துடன் வீற்றிருப்பாள். மாறாக முகத்தை முதலில் துடைத்தால் மூதேவி புகுந்த முகத்துடன் நாள் முழுவதும் கழிக்க வேண்டியது தான். credit: third party image reference அதாவது அன்றைய நாள் அம்போ! அதனால் முதலில் முதுகைத் துடைத்த பின் முகம் துடைக்க வேண்டுமென்ற போதனை பின் தலைமுறைகளுக்கு ...

தாமரை சூரியனின் மனைவியா?

பண்டக்காலத்திலேயே மக்கள் கூறிவருவது தாமரை சூரியனின் மனைவி என்றுதான், இப்போது பலர் இதை விசுவாசித்து வருகின்றனர். இப்படிக்கருத்துகொள்ள தனிப்பட்ட சூழ்நிலைகளுக்குப்படும் போது தாமரையிலுள்ள கோசங்களில் சில மாற்றங்கள் உண்டாகுகின்றன.இவ்வகை மாற்றங்கள் தாமரையில் மட்டுமல்ல மற்ற மலர்களிலும் காணப்படும் என்றாலும் நாம் அவற்றை சரியாகக் கவனிப்பதில்லை. சூரியன் உதிப்பதற்கும் மறைவதற்கும் ஏற்றவாறு தாமரையின் வெளிப்புறத்தில் நிகழும் மாறுதல்களை நித்திராசலனம் என்று சாஸ்திரம் கூறுகிறது.  credit: third party image reference அதிகாலையில் சூரிய ஒளி படும்போது  தாமரை விரிகின்றது. அதாவது தாமரையை இயக்குவது சூரிய ஒளி என்பது பொருள் சூரிய ஒளி காலையில் தாமரை மொட்டில் படும்போது அதனுள் இருக்கும் கோச பாகங்கள் விரிவடைகின்றன இதனால் பூ இதழ்களின் விறைப்பு அதிகரித்து பூ விரிகின்றது. மாலை நேரம் மேல் கூறிய கோச பாகங்கள் எதிர் திசையில் விரிவடைகின்றன். ஏனென்றால் இதன் சுற்றிலுமுள்ள கோசங்களிலிருந்து நீர் உறிஞ்சி எடுக்கின்றது. விளைவாக பூ சுருங்குகின்றது.

பெற்றோர்களை தினமும் கால் தொட்டு வணங்க வேண்டுமா?

           தாய் தந்தையரையும் குருவையும் தினசரிக் கடமையாக கால் தொட்டு வணங்க வேண்டும் என்பது நம் முன்னோர்கள் வகுத்திருந்த விதி. தாய் தந்தையருக்கும் குருவுக்கும் ஓர் மலர்ந்த புன்னகை கூட வழங்காத இத்தலை முறைக்கு இந்த விதி ஓர் பழைய ஏற்பாடு, குருபக்தி அழிந்துவரும் இந்த தலை முறைகளை வார்த்தெடுக்க இயலும் என்று நம்பிக்கை தரும் சில ஆசாரியர்களின் மூதுரைகளும் உளன. மதிப்பைத் தெரிவிக்கும் நான்கு ஆசாரங்கள் நாம் கண்டு வருகின்றோம். அதில் முதலாவதானது. 'வணக்கம்' என்று கூறுவது. இரண்டாவது பெரியோர்களை கண்டால் எழுந்து நிற்பது. மூன்றாவது கால் தொட்டு வணக்கம். இறுதியானது சாஷ்டாங்க வணக்கம். தினமும் காலையில் பெரியவர்களின் கால் தொட்டு வணங்குவதனால் அவர்களுடைய ஆசீர்வாதம் பெறலாம் என்று நம் விசுவாசப் பிரமாணங்கள் கூறுகின்றன் அவர்கள் நமக்கு செய்த சேவைகளை நினைத்து தான் நாம் கால் தொட்டு வணங்குகின்றோம். பதிலாக அவர்கள் ஆசியையும் பெறுகின்றோம். credit: third party image reference யோகாப்பியாசத்தை சிறந்த ஓர் உடற்பயிற்சியாகக் கண்டறிந்து வரும் இந்த நவீன காலத்தில் கால் தொட்டு வணங்குதல...

சூரிய தரிசனம் செய்ய சரியான நேரங்கள் எவை?

காலைக் கதிரவனை தரிசிப்பதற்கும், வணங்குவதற்கும் பாரத கலாசாரத்தில் மிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. மாலை வேளையில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும் என்று ஒரு மூதுரை உண்டு. ஆனால் சூரியனை பார்க்கக் கூடாத, விலக்கப்பட்ட நேரங்களைப் பற்றியும் ஆசாரியர்கள் போதித்துள்ளனர். 'சூரியனென்றொரு நட்சத்திரம் பூமியென்றொரு கோணம்' என்று பண்டைக் காலத்தவர் கூறியதுண்டு. இது பிரபஞ்ச கோடியின் சாஸ்திர அறிவியலின் தத்துவத்தின் அடிப்படையில் கூறுவது. விண்வெளியில் அளவிட முடியாத வண்ணம் உலாவும் சூரியனென்ற அற்புதத்தைப் பற்றி எத்தனையோ கதைகள் நாம் கேட்டிருப்போம். மிகப் பண்டைக்காலம் முதல் மனிதன் ஆராதித்து வந்த ஒன்றுதான் சூரியன். credit: third party image reference இதற்கு உதாரணமாக விளங்குகின்றது ஒரிசா மானிலத்தில் கொனார்க்கில் சூரியன் கோயில். பூமியிலிருந்து சுமார் பதினைந்து கோடி கிலோ மீட்டர் தூரத்தில் நிலைகொள்ளும் சூரியன் மிக மிக வெப்பமானது. மேல்ப் பரப்பில் 580 கெல்வின் மத்தியில் 15.6 கோடி கெல்வின் என்பது இதன் வெப்பம். சுமார் பதினான்கு லட்சம் கிலோ மீட்டர் குறு...