தாய் தந்தையரையும் குருவையும் தினசரிக் கடமையாக கால் தொட்டு வணங்க வேண்டும் என்பது நம் முன்னோர்கள் வகுத்திருந்த விதி. தாய் தந்தையருக்கும் குருவுக்கும் ஓர் மலர்ந்த புன்னகை கூட வழங்காத இத்தலை முறைக்கு இந்த விதி ஓர் பழைய ஏற்பாடு, குருபக்தி அழிந்துவரும் இந்த தலை முறைகளை வார்த்தெடுக்க இயலும் என்று நம்பிக்கை தரும் சில ஆசாரியர்களின் மூதுரைகளும் உளன.
மதிப்பைத் தெரிவிக்கும் நான்கு ஆசாரங்கள் நாம் கண்டு வருகின்றோம். அதில் முதலாவதானது. 'வணக்கம்' என்று கூறுவது. இரண்டாவது பெரியோர்களை கண்டால் எழுந்து நிற்பது. மூன்றாவது கால் தொட்டு வணக்கம். இறுதியானது சாஷ்டாங்க
வணக்கம். தினமும் காலையில் பெரியவர்களின் கால் தொட்டு வணங்குவதனால் அவர்களுடைய ஆசீர்வாதம் பெறலாம் என்று நம் விசுவாசப் பிரமாணங்கள் கூறுகின்றன் அவர்கள் நமக்கு செய்த சேவைகளை நினைத்து தான் நாம் கால் தொட்டு வணங்குகின்றோம். பதிலாக அவர்கள் ஆசியையும் பெறுகின்றோம்.
credit: third party image reference
யோகாப்பியாசத்தை சிறந்த ஓர் உடற்பயிற்சியாகக் கண்டறிந்து வரும் இந்த நவீன காலத்தில் கால் தொட்டு வணங்குதல், சாஷ்டாங்க வந்தனம் என்பவை மிக முக்கியமான யோகா முறைகள். ஆதனால் இதை சிறந்த ஓர் உடற்பயிற்சியாகவும் காணலாம்.
பெற்றோர்களை வணங்குதல் குடும்பத்தில் ஒறுமையுண்டாக்கும், பாசமும் நெருங்கிய
உறவும் உறுதிப்படுகின்றன் இத்துடன் வீட்டில் நிலவும் நிம்மதியின்மையும் போய்விடும் என்ற விசுவாசமுண்டு.
credit: third party image reference
பாதங்களுக்கு தனிச் சிறப்பான தன்மைகள் உள்ளதாக புராணங்களும் முனிவர்களும்
கருதியிருந்தனர். இறைவனின் திருப்பாதங்களையே முனிவர் கள் வணங்கியிருந்தனர்,
இந்து தாம் மங்களில் சேவைகள் செய்யும் அரிஜன மக்கள் இறைவன் பாதங்களினின்று
உதித்தாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.
"ப்ரணாமோ துக்க சமனம்
தம் நமாமி ஹரிம்வரம்"
என்று பாகவதத்திலும் காணலாம்.
Comments
Post a Comment