கோயிலுக்கு செல்லும் பக்தன் பொதுவாக பூசாரியிடமிருந்து பிரசாதம் வாங்கி வர வேண்டும் என்பதுவே முறை. சந்தனம், தீர்த்தம், தீபம், துபம், பூ என்பவை ஐந்தும் பெற்றுக் கொள்ள வேண்டும். இவை பஞ்சபூதங்களைக் குறிக்கின்றன.
பூவும் துளசியும் குவளையும் சேர்ந்ததீர்த்தம் சிறிதும் தரையில் சிந்தாமல் ஒன்றோ இரண்டோ துளிகள் வாங்கி பக்தியுடன் அருந்த வேண்டும். மிஞ்சியிருந்தால் தலையில் தெளிக்கலாம்.
credit: third party image reference
பூவை தலையில் அணியலாம். பெண்கள் கூந்தல் நுனியில் சொருகி வைக்கலாம். தூபமும் தீபமும் இருகைகளால் ஏற்றுக் கொண்டு கண்களில் ஒற்றி கீழ் நோக்கி தடவி விட வேண்டும்.
பின்னர் பிரசாதமாகக் கிடைக்கப்பெறும் சந்தனம் கோயிலுக்கு வெளியே வந்து அணிய வேண்டும். ஆனால் பெரும்பான்மையானோர் கிடைத்தவுடன் அணிவது வழக்கம்.
Comments
Post a Comment