திருநீர் பூசுவதையே மூட நம்பிக்கையாகக் கருதும் இக்காலத்தில், உடல் முழுவதும் திருநீர் பூசவேண்டும் என்று சொன்னால் சொல்லுபவருக்கு 'அடிப்படையாக எதோ குழப்பம் இருப்பதாக கேட்பவர்கள் எண்ணுவர். இறைவனருள் இதனால் கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கை இருந்தாலும் உடலெங்கும் விபூதி அணிவதால் மற்றுமொரு நன்மை உண்டாகும் தலை உச்சியில் திருநீர் பூசினால் அங்குள்ள நீர்க்கெட்டை இழுத்தெடுக்கும் என்பது பலரும் கண்டறிந்துள்ளனர். அதற்காக உடலெங்கும் விபூதியணிவது.அலங்கோலமாக்க வேண்டுமோ என்றால் அதற்குபதிலளிக்க வேண்டியது தான்.
credit: third party image reference
பின் கழுத்தில் திருநீறு பூசுவது மிக அவசியம். ஏனென்றால் நீரை உறிஞ்சி எடுக்கும் வாய்ப்பு மிக அதிகம் உள்ள இடம் அது. காதுகளும் மிக முக்கியமான இடம். உடம்பின் எழுபத்திரண்டாயிரம் நரம்புகளும் ஒன்று சேரும் வர்மமாகும் காதுகள் ஒவ்வொரு நரம்புகளிலும் நீரும் கொழுப்பும் கட்டுவதற்கு வாய்ப்பு அதிகமுண்டு. இதனால் வாதம்
பாதிப்புண்டாகலாம் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.
credit: third party image reference
உடலில் எந்த இடத்தில்விபூதி அணிந்தாலும் அந்த இடத்தில் உள்ள ஈரத்தை உறிஞ்சி எடுக்கும். அவ்வாறு திருநீரணந்தால் நவீன உலகமும் அங்கீகரித்த உடல் மருத்துவத்தை நாம்அடைகின்றோம் என்பதில் சந்தேகம் இல்லை.
Comments
Post a Comment