குளித்த பின் முதலில் முதுகைத்தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை. இதில் நம்பத்தகுந்த சுவாரசியமான ஓர் விஷயம் அடங்கியிருக்கின்றது. நம் உடலில் எப்போதும் இரண்டு சூழ்நிலைகள் உள்ளன. நன்மையும் தீமையும் நன்மையென்ற ஸ்ரீதேவியும் தீமையென்ற மூதேவியும். நாம் குளிப்பதற்காக தலையில் நீரூற்றும் போது ஸ்ரீதேவியும் மூதேவியும் உடலிலிருந்து வெளியேறுகின்றனர்.
பின் நமக்குள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும். உடலில் யார் முதலில் திரும்ப
நுழைய வேண்டும் என்பதற்கே இந்த போராட்டம். உடலில் எந்த பாகத்தில் முதலாவது ஈரம் துடைத்து சுத்தமாகின்றதோ அப்பாகத்தில் மூதேவி நுழைந்து விடுவது வழக்கம். ஏனென்றால் இப்போராட்டத்தில் வெற்றியடைவது தீமையான மூதேவியே. இரண்டாவது முகம் துடைத்தால் அங்கு ஸ்ரீதேவி புகுந்து நாள் முழுவதும் நன்மை விளங்கும் முகத்துடன் வீற்றிருப்பாள். மாறாக முகத்தை முதலில் துடைத்தால் மூதேவி புகுந்த முகத்துடன் நாள் முழுவதும் கழிக்க வேண்டியது தான்.
credit: third party image reference
அதாவது அன்றைய நாள் அம்போ! அதனால் முதலில் முதுகைத் துடைத்த பின் முகம்
துடைக்க வேண்டுமென்ற போதனை பின் தலைமுறைகளுக்கு அளித்துள்ளனர் முன்னோர்கள். இதைக் கேட்டதும் முற்றிலும் மூட நம்பிக்கை என்றெண்ணி தள்ளி விட வேண்டாம். இந்த நம்பிக்கையின் பின்னால் ஒரு மகத்தான அறிவியல் உண்மை அடங்கியிருக்கிறது.இல்லாவிடில் ஆசாரியர்கள் இந்த போதனையை விட்டுச் சென்றிருக்க மாட்டார்கள்.
குளிக்கும் போது நம் உடலின் எல்லா பாகங்களிலும் குளிர் பரவுகின்றது. மிக அதிகமான குளிர் அனுபவப்படுவது முதுகிலாகும். முதுகெலும்பில் அதிகநேரம் குளிர் ஏற்க வேண்டியது வந்தால் நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு. இதனால் உண்டாகும் தீங்கைத் தவிர்க்கவே குளித்த உடன் முதுகைத்துடைக்க வேண்டும் என்ற விதிமுறையை வகுத்துள்ளனர்.
credit: third party image reference
ஆனால் ஒரு வாளி குழாய்த்தண்ணீரில் குளித்து முடிப்பவர்களுக்கு இந்த சாஸ்திரம்
பொருந்தாது. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிமையாக ஒடும் நதியிலோ குளத்திலோ நெடு நேரம் மூழ்கிக் குளிப்பவர்களுக்க"வகுக்கப் பட்ட விதி இது.
Comments
Post a Comment