காதுக்கு பின் துளசிக்கதிர் அல்லது இலை சூடுவதற்க்கு இக்காலத்தில் யாரும் தயாராகமாட்டார்கள். அப்படி சூடுபவர்களை "காதில் பூவைத்தவன்" என்று ஏளனமாகக் கூறுவதுண்டு. ஆனால் காதுக்குப்பின் துளசி வைப்பதனால் பெரும் பயனடைந்தனர் பண்டைய மக்கள். மனித உடலில் மிகக் கூடுதல் உறிஞ்சும் சக்தியுடையது காதுக்குப் பின்புறம் ஆகும் என்பது விஞ்ஞானம் நிரூபித்திருக்கின்றது.
துளசியின் மருத்துவ குணங்கள்களை நாம் நன்கறிவோம் இந்த மருத்துவ
குணங்கள் காதுக்குப்பின்னுள்ள சரும் வழியாக ஊடுருவிச் செல்லும். இதுவே பழங்காலத்து மக்கள் காதுக்குப்பின் துளசியிலையை சூடிவந்ததும், பின் சந்ததிக்கு அதைக் கற்பித்ததும். பழங்காலத்திலுள்ள வீடுகளில் துளசி மாடம் கட்டி துளசியை ஓர் புனிதச் செடியாகப் பராமரித்து வந்தனர்.
credit: third party image reference
சூரிய ஓளி கிடைக்கும் இடத்தில் கிழக்குப் பக்கத்து வாசலுக்கு நேராக துளசிமாடம் கட்ட வேண்டும் என்று ஆசாரியர் போதித்துள்ளனர். வீட்டின் அளவில் துளசித் தரை அமைக்க வேண்டும். துளசி தரையை விட தாழ்ந்த மட்டத்திலாகாமல் குறிப்பிட்ட தரையில் நடுவதற்காக கிருஷ்ணதுளசி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. துளசிச்செடிக்குப்பக்கம் அசுத்தமாகச் செல்வதாகாது.ஜெபம் செய்து கொண்டே அதன் பக்கம் செல்ல வேண்டும்.
credit: third party image reference
,துளசியை தினமும் மூன்று வேளை வலம்
வர வேண்டும். வலம் வரும் போது
"பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லபே
க்ஷுரோதமதநோத்புதே
துளசி த்வாம் நமாம்யகம்"
என்ற மந்திரம் சொல்ல வேண்டும்
துளசிப்பூ பறிக்கும் போது
'துளஸ்வமுத சம்பூதா
சதா த்வம் கேசவப்ரியே
கேச வார்த்தம் லுனமி த்வாம்
வரதா பவ சோபனே'
credit: third party image reference
மாலை நேரமும், ஏகாதசிக்கும், செவ்வாய் வெள்ளி நாட்களிலும் துளசிப்பூ பறிக்கலாகாது என்றும் விதியுண்டு. பூஜைக்கல்லாமல் துளசிப் பூ பறிக்கவும்
கூடாது.
Comments
Post a Comment