கிரகண நேரம் சூரியனைப் பார்க்கக் கூடாது என்று பொயோர் கூறும் போது அதை மூட நம்பிகை என்று இளைய தலைமுறைகூறிவந்தது. ஆனால் இது கண்ணுக்குக் கெடுதல் உண்டாக்கும் என்று நவீன சாஸ்திரம் கூறுகிறது. கிரகண நேரம் மட்டுமல்ல எப்போது சூரியனை நேரடியாகப் பார்த்தாலும் கண்ணில் பதியும் சூரியப் பிரதி பிம்பத்துக்கு கண்ணின் ரெடினாவை சுடுமளவுக்கு வெப்பமுண்டு. சாதாரணநேரத்தில் சூரியனை நேரடியாகப்பார்கும் போது ஒளியின் தீவிரம் காரணமாக கண் இமைகள் அடைந்து விடும். ஆனால் கிரகண நேரம் சூரியனின் பெரும் பாகம் சந்திரன் மறைக்கின்றது. ஆதனால்ஒளியின் தீவிரம் குறையும், கண் இமைகளும் ஏறத்தாழ முழுமையாகத் திறந்திருக்கும். சூரிய ஒளியின் ஓர் சிறு அம்சமாவது கண்ணில் படியும் போது பிரகாசம் கண்ணுக்குள் புகுந்து ரெடினாவை சுட்டுவிட வாய்ப்புண்டு. சூரியனின் சிறிய ஓர் அம்சத்திலிருந்து வரும் ஒளிக்கதிர் கூட பூரண சூரிய பிரதிபிம்பத்தின் அளவு வெப்பத்துடன் வருகின்றது என்று கண்டறிந்துள்ளனர். கிரகண நேரம் சூரியனைப் பார்க்கலாகா தென்பது இதனால்தான்.
Tamil:ஓலைச்சுவடி Tamil Olaichuvadi