தொன்று தொட்டே பாரத மக்கள் பின்பற்றிவந்த ஓர் ஆசாரமுறை சூரிய நமஸ்காரம் உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரமிது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடல் பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது.
மேற்கத்திய நாடுகள் உட்பட உலகின் எல்லா பாகங்களிலும் இந்த ஆசார முறை பிரசித்தி பெற்றிருக்கின்றது ஜிம்னாஸ்டிக்ஸ், சன்பாத் என்ற பெயர்களில், சூரிய நமஸ்காரத்தை உட்படுத்திய உடற்பயிற்சிகள் செய்துவருகின்றனர்.
![](https://img.pgc.in.goldenmob.com/img/1b50dbb0314111e9a2289fd14f86d814/2a2cf228fabcb167ab033e2e51d518d1-480.jpg)
சூரியநமஸ்காரம் வாயிலாக நமது உடலிலுள்ள எல்லா முட்டுகளுக்கும் அசைவு ஏற்படுகின்றது. சருமத்தில் வைட்டமின் டி ஒளிக்கதிர்களுக்கு உண்டு. கால்சியம் உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய உற்பத்தியை கட்டுப்படுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்துள்ளன.
![](https://img.pgc.in.goldenmob.com/img/1b50dbb0314111e9a2289fd14f86d814/ff8d6adc3ae12e05ba684730514202e9-480.jpg)
மேலும் உடலுறுப்புகள் உறுதி பெறுவதால் காச நோயணுக்களின் ஆக்கிரமிப்பையும் தடுக்கின்றது.தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதனால் அகால வயதுமுதிர்ச்சியை ஓரளவுக்கு தடை செய்யலாம். மூட்டுகள் நல்ல லாவகமடைகின்றன தொப்பை வயிறு வருவதை கட்டுப் படுத்த இயல்கின்றது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவுகின்றது சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் ஆரம்பத்தில் அனுசரிக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம். பரிசுத்தமான எளிய வாழ்க்கை வாழவேண்டும். அளவான உணவு அருந்த வேண்டும்.
![](https://img.pgc.in.goldenmob.com/img/1b50dbb0314111e9a2289fd14f86d814/068884bfda53f09703f37729a2d11ba8-480.jpg)
குளிப்பது தண்ணீரிலானால் மிக நன்றாயிருக்கும். விசாலமானதும் தூய்மையானதும் காற்றோட்டமுள்ளதுமான இடத்தில் நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்கார வேளையில் மிக அவசியமான ஆடை மட்டும் தளர்த்தியாக அணிய வேண் டும்.
தேனீர், காபி. கொக்கோ, புகையிலைமதுபானம் முதலியவை அருந்த வேண்டாம் இப்படி அனேக.விஷயங்கள் கவனித்து சூரிய நமஸ்காரம் ஆரம்பிக்க வேண்டும்
Comments
Post a Comment