ஈரத்துணி உடுத்தால் அது வயிற்றுக்குத் 'தீங்கு விளைவிக்கும் என்று கூறுவதுண்டு. குளித்து ஈரத்துணி உடுத்து கோயில் 'தரிசனம் செய்யும் போது பூரண பரிசுத்தம் 'மட்டுமே அதிலிருந்து எதிர்பார்க்கின்றோம் என்று கருதி வருகின்றோம்.
credit: third party image reference
'நம்நாட்டின் பல கோயில்களிலும் குளத்திலோ 'நதியிலோ குளித்து, ஈரத்துணியுடன் பக்தர்கள் கோயில் தரிசனம் செய்வதும் கோயில் வலம் வருவதும் ஒரு காலை காட்சி.
இவ்வாறு செய்வதனால் வயிற்றுக்கு தீங்கு என்ற நம்பிக்கை பலர் கொண்டுள்ளனர். ஆனால் ஈரத்துணி உடுப்பதனால் தீமையல்ல நன்மையே உண்டாகின்றது. நாம் உண்ணும் உணவு மற்றும் குடிக்கும் நீரிலிருந்து ஏராளம் நோயணுக்கள் மற்றும் விஷப்பொருட்கள் உட்செல்கின்றன என்று பழைய காலத்திலிருந்தே நாம் அறிந்துள்ளோம்.
credit: third party image reference
இவ்வகை விஷப் பொருட்களால் உணவு ஜீரணம் பாதிக்கப்படுகின்றது. சரியான ஜீரண நடக்காமலிருப்பதனால் மலக்கழிவு சரியாக நடப்பதில்லை. இதனால் மலம் சரியாகக் கழியவில்லையானால் வயிற்றுக்குள் வெப்பம் ஏற்படும். இதனால் பல நோய்கள் வரலாம். ஈரத் துணி உடுத்து கோயில் தரிசனம் செய்வதன் காரணம் வயிற்றின் வெப்பத்தை குறைப்பதற்காகவே. இதை இன்றைய நவீன மருத்துவத்துறையே ஒரு சிகிட்சையாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.
Comments
Post a Comment